பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் பதிப்புரை ஆங்கிலேய ஏகாதிபத்தியம் பாரதத்திற்கு எத்தனையோ நன்மைகளைப் புரிந்திருக்கிறது. அடிமை வாழ்வின் அவலத்தை உணர்த்தியது மட்டுமின்றி, பல்வேறு இனங்களாகச் சிதறிக் கிடந்த பாரத மக்களை ஒரே தேசிய இனமாக உணரச் செய்ததும் ஆங்கிலேய ஆதிபத்தியம்தான். எத்தனையோ அந்நியப் படை யெடுப்புகளுக்கும் ஆளுகைக்கும் ஆட்பட்டு அடங்கிக் கிடந்த போதெல்லாம்கூட ஏற்படாத ஒரு தேசிய உணர்வு ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ்தான் நமக்கு ஏற்பட்டது. முன்னர் வந்த மொகலாயரும் சரி, மாசிடோனியர் களும் சரி, பின்னர் வந்த போர்ச்சுக்கீசியர், மற்றும் பிரெஞ்சுக்காரர்களும் சரி, கிடைத்தவரை ஆதாயம் என்ற நோக்கில் பகுதி பகுதியாக ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்டார்களேயன்றி, ஆங்கிலேயர்களைப் போல யானைப் பசியுடன் பாரதத்தின் பெரும்பகுதியைத் தங்களது ஆளுகையின்கீழ் கொண்டுவர முயலவில்லை. ஆங்கிலேயரின் இந்த அகோரமான ஆதிக்க வெறியே இமயம் முதல் குமரிவரை நாம் அனைவரும் ஒரே நாட்டினர் என்ற உணர்வைத் தோற்றுவித்தது. அதற்கு முன்பு அநாதி காலமாக பாரதம் முழுமையும் மதவழிப்பட்ட ஒரு ஆன்மீகச். சரடு பிணைத்திருந்தாலும் கூட அது மூட்டையில் கட்டிய நெல்லிக்காய்களாக இருந்ததே தவிர நாரில் தொடுத்த மாலையாக இருக்க வில்லை. இப்படி அந்நியரால் நம்மிடையே உருவாக்கப்பட்ட தேசிய உணர்வை, அந்த அந்நிய வழியிலேயே வந்த ஒருவரால் தொடங்கப்பட்டு, பல்வேறு மாற்றங்களும், வளர்ச்சியும் அடைந்து மலர்ந்த காங்கிரஸ் மகா - இயக்கத்தை வளர்த்து வாழவைத்தது.