பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தல-தீர்த்த யாத்திரையும் அரசியல் யாத்திரையும் இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய பின்னர், பாரதப் பெருநாட்டிலே, சமய உணர்வு இரண்டாந்தரமாகி விட்டது. சமய எதிர்ப்பில் காங்கிரஸ் நேரடியாக ஈடுபடவில்லை. உண்மையில் காங்கிரஸ்காரர்களில் மிகப் பெரும்பாலோர் சமய நம்பிக்கையும் தெய்வ நம்பிக்கையும் உடையவர்களாகவே இருந்தனர். இருந்தாலும், அவர்கள் தோற்றுவித்த தேசிய எழுச்சி யானது பாமர மக்களை அணுகியதும் இயற்கையாகவே சமயம் இரண்டாந்தரமாகிவிட்டது. தல - தீர்த்த யாத்திரை! வேத காலம் எனப்படும் ஒரு காலந்தொட்டு, இந்திய மக்களிலே பாவ புண்ணியங்களில் நம்பிக்கை யுடையோர் தல யாத்திரையிலும் தீர்த்த யாத்திரையிலும் ஈடுபட்டு வந்தனர். இதனைச் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழிலுள்ள பெருங் காப்பியங்களிலேயும் காண முடிகிறது. வடக்கிலுள்ளவர்கள் குமரியாடவும் காவிரியாடவும் தெற்கு நோக்கித் தீர்த்த யாத்திரை வந்தனர். அதுபோல,