பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

64 | இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது விவேகானந்தரும் விபினசந்திரரும் முக்கியமானவர்கள்" என்று ரௌலட் கமிட்டியின் அறிக்கை அறிவிக்கிறது. பண்டைக்கால சமயத் தலைவர்களின் தீர்த்த யாத் திரைக்ரும் தல யாத்திரைக்கும் இல்லாத பெருமதிப்பைத் தேசியத் தலைவர்களின் தேச விடுதலை யாத்திரை பெற்ற தெனலாம். - காந்தி சகாப்தத்திலே... காந்தி சகாப்தத்திலே, கிராமங்களை நோக்கி யாத்திரை நடத்துங்கள்” என்றார் காந்தியடிகள். இதனால் காங்கிரசானது தேசியம் என்பதை ஒரு புதிய மதமாக்கி விட்டது. தேசியத் தலைவர்கள் சமயாச்சாரியர்களுடைய இடத்தில் வைத்து மக்கள் மதிக்கத்தக்க சமூகாச் சாரியர்களாகி விட்டனர். இது, கற்பனையோ, மிகைப் பட்ட வருணனையோ அல்ல, ஒரு நூற்றாண்டு கால சரித்திரம் போதிக்கும் உண்மையாகும். நம்மிடையே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் வயதான தேசபக்தர்கள் தங்கள் கண்களை மூடிக் கொண்டு சிந்திப்பார்களானால், அவர்கள் அந்நாளில் கிராமந்தோறும் யாத்திரை செய்தது அவர்களுடைய அகக் கண்களுக்குக் காட்சியளிக்கும். அவர்கள் நடத்தியது தல யாத்திரையோ தீர்த்த யாத்திரையோ அல்ல; ஒரு நூற்றாண்டு கால சரித்திரம் போதிக்கும் உண்மையாகும். நம்மிடையே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் வயதான தேசபக்தர்கள் தங்கள் கண்களை மூடிக்