பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது எழுச்சி நாட்டில் ஏற்பட்ட பின், மக்கள் சொர்க்கத்தை மறந்து சுதந்திரத்தை அடையவே ஆசைப்பட்டனர். அத்தகைய ஆசையை ஏற்படுத்தினர் அரசியல் பேச் சாளர்கள். பாரத தேசத்திலே நகரங்களிலும் கிராமங்களிலும் முள்ள கடற்கரை - ஆற்றங்கரை மணற் பரப்பிலே, பூங்காக்களிலே, ஊர்தோறுமுள்ள கோயில்களிலே, முச்சந்திகளிலே கூட்டங்கள் நடத்தினார்கள். தேசிய வாதிகளின் புனித பாதங்கள் படாத ஊரே இல்லை என்று சொல்லுமளவுக்கு அவர்கள் பிரச்சார யாத்திரை நடத்தினர். தொடக்க காலத்தில் மக்களைப் பழைய குருட்டு நம்பிக்கைகளிலிருந்து விடுவிக்கும் இந்த அறிவுப் புரட்சியிலே வைதிகச் சாதிகளில் பிறந்தவர்களே முன்னணியில் நின்றனர். அவர்களில் தமிழ் நாட்டில் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதி, சுப்பிரமணிய சிவா, ஜி. சுப்பிரமணிய ஐயர், கிருஷ்ணசாமி சர்மா ஆகியோர் முக்கியமானவராவர். அறிவுப் புரட்சி! தேச மட்டத்திலுள்ள பெருந்தலைவர்களோ, மாநில - மாவட்ட மட்டத்திலுள்ள தேசத் தொண்டர்களோ பேசினார்களென்றால், அவர்கள் பேச்சிலே அடிமைத் தனத்தின் கொடுமைகள் வருணிக்கப்படும், அதிலிருந்து விடுபட்டுச் சுதந்திரம் பெறவேண்டியதன் அவசியம் விளக்கப்படும்.