பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது ஐயா அவர்கள் தன்னுடைய இந்த நூலில் காங்கிரஸ் பேரியக்கத்தின் வரலாற்றை மட்டும் சொல்லிச் செல்ல வில்லை. அதன் ஆத்மாவையே தொட்டுக் காட்டி யிருக்கிறார்கள். மதச்சார்பற்ற தன்மையிலும், நிறத் துவேஷமற்ற தன்மையிலும், மக்களின் உரிமைக்காகத் தோன்றிய அந்த இயக்கம் படிப்படியாக வளர்ச்சி பெற்று தீவிரமான விடுதலை இயக்கமாக மலர்ச்சியுற்றதையும், காந்தியடி களின் தலைமைக்குப் பிறகு இயக்கம் விடுதலைக் கோஷத்தை மட்டுமே கொண்டிராமல் நவபாரதத்தின் நிர்மாணத்திற்கான அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்தியதையும் விரிவாகவே ஆராய்ந் திருக்கிறார்கள். தொலை நோக்குடன் பெண்கள் முன் னேற்றத்திலும், தீண்டாமை ஒழிப்பிலும், மற்றைய சமூக சீர்திருத்தங்களிலும் அது கடமையாற்றிய விபரத்தை விரிவாகவே சொல்லியிருக்கிறார்கள். காந்தியடிகளாலும் அவர்தம் கொள்கைகளாலும் முழுமையாக ஆட்கொள்ளப் பட்டவராதலின் ஐயாவின் குரல் அந்த இயக்கத்தின் வரலாற்றைக் கூறும்போது ஆத்மபூர்வ மாகவே ஒலிக்கிறது. தேசிய உணர்வைப் புறக்கணித்துப் பிளவுபட்டுக் கிடப்பதால் உண்டாகும் தீமையைப் புரிந்து கொள்வ தற்காக தேசியத்திற்குப் புறம்பானவர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்வோரும், மொழிவழிப்பட்ட இனங்களின் நலனையும், உரிமையையும், உணர்வுகளையும் மதிக்க மறந்தால் தேசிய உணர்வு எப்படிச் சிதையும் என்பதை உணர்ந்து கொள்ள தேசியவாதிகள் என்று தம்மைச் சொல்லிக் கொள்வோரும் - ஏற்பட்டுள்ள ஒரு மகத்தான ஒற்றுமை யைப் பேணிக்காத்துப் போற்ற வேண்டிய அவசியத்தை உணர அனைவராலும் படிக்கப்பட வேண்டிய நூல் இது. இதனை வெளியிடும் நல்வாய்ப்பினை நல்கிய ஐயா அவர்களுக்கு எங்கள் நன்றி. வே. சுப்பையா பூங்கொடி பதிப்பகம்.