பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் சமயங்களைக் காக்கவும் தேசத்தின் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்கு யாத்திரை சென்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டிலே, பழைய வைதிகர் களின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க ஆரிய சமாஜ ஸ்தாபகர் தயானந்தரும், பிரமசமாஜ ஸ்தாபகர் ராம்மோகனராயும் காஷ்மீரிலிருந்து கன்னியா குமரிவரை யாத்திரை செய்தனர். இவர்களெல்லாம் பாத யாத்திரை செய்த புனித பூமியிலேதான் மக்களை அன்னியரின் அடிமைத்தனத்தி லிருந்து விடுவிக்கவேண்டி அரசியல் யாத்திரை நடத்தினர் தேசிய காங்கிரஸ் தலைவர்கள். முதல் இயக்கம் 1916-ல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த காந்திஜி தன் குருவான கோகலேயின் ஆணைப்படி குமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை செய்தார். இந்தக் கண்ணோட்டத்துடன் இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய பின்னுள்ள ஒரு நூற்றாண்டு கால வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால், சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள சாமான்ய மக்களைப் பழைய நம்பிக்கைகளிலிருந்து விடுவித்து அவர்களையெல்லாம் அறிவு மேடைக்குக் கொண்டு வந்த முதல் இயக்கம், தேசிய இயக்கமே என்பது மறுக்கமுடியாத உண்மை என்பது புலனாகும்.