பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது சமய அல்லது சீர்திருத்த இயக்கங்களின் வரலாற் றைப் பார்த்தால், அவற்றைச் சேர்ந்தவர்கள் நேரடியாகப் பழைய குருட்டு நம்பிக்கைகளைத் தாக்கினதாலே பலன் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை . நாளடைவில் அவர்களே ஒரு புதிய மதமாகி, மேலும் வளர்ச்சியின்றி முடங்கிக் கிடந்ததுதான் கண்ட உண்மை . மக்களுடைய மத வழிப்பட்ட பழைய பழக்க வழக்கங்களைத் தாக்கினால், அவற்றைக் கடைப் பிடிப்பவர்கள் எல்லாம் 'மூடர்கள்' என்று ஏசினால், அந்தத் தவறுகளை விடாமல் கடைப்பிடிக்கும் பிடிவாதமே அவர்களுக்கு ஏற்படும். இந்திய தேசிய காங்கிரஸ் அந்தத் தவறைச் செய்யவில்லை . அது, தான் உருவாக்கிய தேசிய எழுச்சியாலேயே, தேசவிடுதலை ஆர்வத்தாலேயே, உள்நாட்டு - வெளிநாட்டு முதலாளித் துவச் சுரண்டலை ஒழித்துக்கட்ட வேண்டு மென்ற ஆர்வத்தை மக்கள் மனத்தில் வளர்த்தனாலேயே அறிவு வளர்ச்சிக்குப் பெருந்தொண்டு புரிந்தனெலாம். அடக்குமுறை இந்திய தேசிய காங்கிரசார் சாமான்யப் பொது மக்களை அணுகி விடுதலை ஆர்வத்தை ஊட்டும் வகையில் அரசியல் - பொருளாதாரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் என்றால், அதற்காக அந்நாளில் அவர்களுக்குக் கிடைத்தவை பூமாலைகள் அல்ல! பொன்னாடைகளும் அல்ல! போலீசாரிடம் அடி, உதை நீதிமன்றத்தில் சிறைவாசத் தண்டனை!