பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் மக்களுடைய வறுமைக்கும் கல்வியின்மைக்கும் பிரிட்டிஷ் ஆட்சிதான் காரணமென்பதனை அடையாளம் காட்டிய தேசியவாதிகளை ஒடுக்குவதற்கு புதிய சட்டங்களைப் பிறப்பித்து, அரசுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு அரச நிந்தனை எனப் பெயர் கொடுத்து, அதிலே ஈடுபடுவோருக்கு ஆண்டுக் கணக்கில் சிறைத் தண்டனை கொடுக்க இந்தியன் பெனல் கோடு சட்டத்தையும் ஆங்கிலேய அரசு திருத்தியது. பொதுக் கூட்டங்களையும் ஊர்வலங்களையும் சட்ட விரோதமாக்க 144 தடைச் சட்ட மொன்றையும் பிரிட்டிஷ் அரசு தோற்றுவித்தது. இதன் விளைவாக, இரண்டு சொற்பொழிவுகளுக்கு இரண்டு ஆயுள்கால நாடு கடத்தல் தண்டனை பெற்றார் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார். அவரோடு சேர்ந்து பத்தாண்டு கால நாடு கடத்தல் தண்டனை பெற்றார் சுப்பிரமணிய சிவா. அரச நிந்தனையாக எழுதுகிறார், பாடல் புனைகிறார் என்பதற்காக மகாகவி பாரதியார் மீது அரசு வாரண்டு பிறப்பித்தது! ஆம்; அவரைக் கைது செய்து ஆண்டுக் கணக்கில் சிறையிலடையக்க! தகவல் அறிந்து, பாண்டிச்சேரிக்குத் தப்பிச் சென்றுவிட்டார் பாரதியார். ஆயுள் தண்டனை! லோகமான்ய திலகருக்கு 19-ம் நூற்றாண்டின் இறுதியிலே ஒன்றரையாண்டுச் சிறைத் தண்டனை!