பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் களிடம் ஜாமீன்தொகை பெற்றது. திரும்பத் திரும்ப அரச நிந்தனையாக எழுதியதாகச் சொல்லி, ஜாமீன் தொகை களைப் பறிமுதல் செய்தது. பல பத்திரிகைகளை வெளி வர விடாமலே தடை செய்துவிட்டது. 1921-ல் காந்தியடிகள் ஆறாண்டு கடுங்காவல் தண்டனை பெற்றது, “நவ இந்தியா” என்னும் தமது பத்திரிகையில் அரச நிந்தனையாக எழுதியதால்தான். திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். தேச விடுதலை இயக்கமானது, எழுதப் படிக்கத் தெரியாத சாமான்ய மக்களையும் அறிவு வளர்ச்சி பெறச் செய்தது.. தங்கள் வறுமைக்கும் பிணிக்கும் கல்வி யின்மைக்கும் உண்மையான காரணங்கள் என்ன என்பதனை அவர்கள் அறியும்படிச் செய்தது. வேறு எந்தச் சமய - சமூசு சீர்திருத்த இயக்கத்தாலும் இவ்வளவு மகத்தான சிந்தனைப் புரட்சியை மக்களிடையே ஏற்படுத்தியிருக்க முடியாது. இத்தகைய சாதனைகளைக் கொண்ட தேசீய சரித்திரத்திற்குத்தான் இந்த ஆண்டிலே ஒரு நூறு வயது ஆகியது.