பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் 1. ஐ.சி.எஸ். தேர்வை இந்தியாவிலும் நடத்தல். 2. இந்தியர்களுக்கு இராணுவ உயர் உத்தியோகங்களில் பயிற்சியளிக்க இராணுவக் கல்லூரிகளை அமைத்தல். 3. நீதிமன்றங்களில் உயர் உத்தியோகங்களை சட்டம் படித்த பட்டதாரிகளுக்கு அளித்தல், 4. கல்வி இலாக்காப் பதவிகளில் இந்தியர்களுக்குத் தலைமை உத்தி யோகங்கள் கிடைக்கக்கூடிய வகையில் அந்த இலாக்கா வைத் திருத்தி அமைத்தல், 5. பொது மராமத்து இலாகாவில் தலைமை உத்தியோகங்களுக்கு இந்தியர்கள் நியமிக்கப்படுவதற்குள்ள தடைக் கட்டுப் பாடுகளை அகற்றல், 6. சாதாரண இலாக்காக்களிலும் உயர் உத்தியோகங்களில் இந்தியர்களை அதிகமாக நியமித்தல், 7. காவல் (போலீஸ்) துறையில் உயர் பதவிகளுக்கு இந்தியரை நியமிக்க லண்டனில் நடைபெறும் இப்பதவிகளுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ள இந்தியர்களுக்கும் வாய்ப்பு அளித்தல், 8. சட்டத்துறையில் நிர்வாக உறுப்பினர் பதவிகளுக்கு இந்திய வக்கீல்களையும் அட்டர்னிகளையும் நியமனம் செய்தல், 9. இங்கிலாந்தில் தங்கும் இந்திய மாணவர்களுக்குப் பிரத்தியேக வசதிகள் அளித்தல், 10. இந்தியப் பல்கலைக் கழகச் சட்டத்தில் திருத்தம் செய்தல். இந்தியர்கள் - குறிப்பாக, படித்தவர்களை பொது மக்களின் தலைவர்களாக்கும் வகையில் பல அரசியல் சீர்திருத்தங்களைக் கோரும் தீர்மானங்களும் காங்கிரஸ் மகாசபையில் நிறைவேற்றுப்பட்டன. அவை வருமாறு: