பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 - இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது 1. பூரண ஸ்தல சுயாட்சி உரிமை வழங்கல், 2. பஞ்சாப் மாநிலத்திற்கு ஓர் நிர்வாக சபை நிறுவுதல், 3. லண்டனிலுள்ள இந்தியா கவுன்சிலை இந்தியர்களும் இடம் பெறத்தக்க வகையில் திருத்தியமைத்தல், 4. ஐக்கிய மாகாண (உத்தரப் பிரதேச)த்தில் அமைச்சர் களுடன் கூடிய கவர்னர் நிர்வாக சபை அமைத்தல், மிதவாதிகள் கோரிய அரசியல் சீர்திருத்தம் பொதுவாக, இந்தியாவின் அரசியல் - பொருளாதார அந்தஸ்தையும் உரிமைகளையும் எதிரொலிக்கும் தீவிரமான அரசியல் கோரிக்கைகளை வெளியிடும் தீர்மானங்களையும் காங்கிரஸ் மகாசபை நிறைவேற்றி வந்தது. அவை வருமாறு. 1. லண்டனிலுள்ள இந்தியா கவுன்சிலை ஒழித்தல், 2. இந்தியாவில் இராணுவத்திற்காகும் செலவில் நியாயமான பகுதியை பிரிட்டிஷ் அரசு ஏற்றல். 3. மாகாணங்களுக்கு நிதி, வரி நிர்வாகத்தில் சுதந்திரம் அளித்தல், 4. இந்தியர்களின் பொருளாதார நிலையை ஆராய விசாரணை நடத்தல், 5. கைத்தொழில்கள் சம்பந்த மான கல்வி முறைகளைப் போதிக்கவும் பெரிய தொழில் களின் அபிவிருத்திக்காகவும் தீவிர முயற்சிகள் எடுத்தல். 6. அரசின் நாணய மாற்றுக் கொள்கைகளை நினைத்தபடி யெல்லாம் மாற்றுவதைக் கைவிடல், 7. இங்கிலாந்தில் இந்திய நிர்வாகத்தின் பொருட்டு ஊதாரித்தனமாகச் செய்யும் செலவைக் குறைத்தல். 8. இங்கிலாந்திலுள்ள இந்தியா காரியாலயம், இந்தியா