பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் மந்திரி சம்பந்தமான செலவுகளைப் பிரிட்டிஷ் அரசே ஏற்றல். இதுகாறும் எடுத்துக் காட்டியவை யெல்லாம் 1905க்கு முன் கூடிய காங்கிரஸ் மகாசபைகளில் இந்திய தேசியம் என்னும் பெயரால் படித்த வகுப்பாருக்குச் சலுகைகள் கோரி நிறைவேற்றிய தீர்மானங்களாகு மென்பதை மீண்டுமொருமுறை நினைவில் கொள்வோ மாக! இருவகைத் தேசியங்கள் இந்நிலையில் 1905-ஆம் ஆண்டில் இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கு வைசிராய் லார்டு கர்சான் மரண அடி கொடுக்க முயன்றார். அது, அப்போதைய பெரிய வங்காளத்தைக் கிழக்கு மேற்காகத் துண்டாடிய திட்டமாகும். வங்கப் பிரிவினை என்று பெயர்பெற்ற கர்சான் திட்டமான 1947-ல் நடந்தது போன்ற தேச (வங்க)ப் பிரிவினை போன்றதல்லவாயினும், மத அடிப்படையில் வங்கத்தை இருவேறு மாநிலங்களாகத் துண்டாட முன்வந்ததால், அதனைத் தேசிய ஒருமைப்பாட்டுக்குக் கர்சான் கொடுத்த மரண அடியாக இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை கருதியது. 1915-ஆம் ஆண்டிலே சர்வதேச அமைப்பான பிரம்ம ஞான சங்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்த டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார் இந்திய தேசிய காங்கிரஸ் மேடைக்கு வருகிறார், "ஹோம் ரூல்' என்னும் ஆங்கிலப் பெயரிலே இந்தியாவுக்குச் சுயாட்சி கோரும்