பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் என்னுரை 1935இல் காங்கிரஸ் பொன்விழாவை ஒட்டி எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் ராஜாஜி அவர்கள் இந்திய தேசியம் காங்கிரஸ் என்ற பெயரில் மலர்ந்தது" எனக் குறிப்பிட்டார். பாரதியாரும் பாரத ஜன சபை வரலாறு" எனும் நூலில் 1885-ல் பம்பாயில் காங்கிரஸின் தோற்றத்தைப் பற்றி குறிப்பிடும் பொழுது “பாரத ஜாதி பேசத் தொடங்கிற்று' என்று குறிப்பிட்டார். தேச பக்த மெய்ஞ்ஞானி சுவாமி விவேகானந்தர் 1896-இல் லண்டனில் இந்தியா லண்டன் எனும் பத்திரிகை நிருபருக்கு அளித்த பேட்டியில், “இந்தியா வில் பல இனத்தாரிடையே ஒரு நாடு உருவாகின்றது" என்று காங்கிரஸை குறிப்பிட்டுப் பாராட்டினார். என்னுடைய "காங்கிரஸ் வினா விடை (1979)" எனும் நூலிற்கு டாக்டர் ம.பொ.சி. எழுதிய அணிந் துரையில் காங்கிரஸிற்கு "தேசிய" எனும் அடைமொழி இணைந்ததிற்கான காரணத்தைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 'இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபை" என்னும் பெயரானது, இந்தியப் பெருநாட்டின் வரலாற்றில் ஒரு புனிதமான இடத்தைப் பெற்றுவிட்டது. இந்தியாவின் விடுதலைக்குப் போராடி, அதிலே மகத்தான வெற்றிகண்ட பெருமை காங்கிரஸ் மகாசபைக்கு உண்டு, நாடு விடுதலை பெறுவதற்கு முன்பிருந்த “காங்கிரஸ் மகா சபை" வேறு, இன்றுள்ள "காங்கிரஸ் கட்சி" வேறு. 'தேசிய காங்கிரஸ் மகாசபை" என்பது, அரசியல் கட்சிகளிலே ஒன்றல்ல, தேசத்திலுள்ள அனைத்துப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் வாய்ந்த