பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் கொண்டு போய்க் கொடுத்தவர் பெசண்ட் அம்மையார் தான். இதிலே திலகரும் அம்மையாருக்குத் துணை புரிந்தார். தேசியத்திலே ஒரு திருப்பம் ஆனால், அவராலும் கீழ்த்தர மக்களோடு அதாவது - உழவர், தொழிலாளர்களோடு தொடர்பு கொள்ள இயலவில்லை . அவர், இந்தி மொழியிலோ, மாநில மொழிகளில் ஏதேனும் ஒன்றிலோ தமது பிரச்சாரத்தை நிகழ்த்தச் சக்தியற்றவராக இருந்தார். உயர்தரமான ஆங்கிலத்தில்தான் பேசலானார். ஆங்கிலம் படித்தவர்க ளோடு மட்டும்தான் அவரது தொடர்பு அமைந்தது. ஆயினும், ஆங்கிலத்தில் ஓரளவே ஞானம் பெற்றிருந்த நடுத்தர மக்களையும் அவரது பிரச்சாரம் கவர்ந்தது. தேசிய காங்கிரஸ் மக்கள் இயக்கமாக மாறி வருகின்றது. என்ற உண்மை நிலையை பிரிட்டிஷ் ஆட்சி உணர முடிந்தது. மாநிலந்தோறும் புதிய புதிய பிரமுகர்கள் - தங்கள் வாழ்க்கை நலம் காரணமாக மிதவாதத் தன்மையுடைய வர்கள் - கொஞ்சம் தீவிரவாதிகளாக மாற முன்வந்தனர், ஆம்; முதல் 1908 வரையுள்ள மூன்றாண்டுக் காலத்திலே தேசியமானது திலகர், அரவிந்தர், வ.உ.சி., லாலா லஜபதி, விபினசந்திரபாலர் ஆகியோரின் வடிவங்களிலே விசுவரூபம் எடுத்துக் காட்சியளித்தது. ஆனால், அவர்கள் எல்லாம் நீதி மன்றத்தில் கடுந் தண்டனைகள் பெற்றும், தண்டனை ஏதும் பெறாத விசாரணைக்