பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் 81/ சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளிடம் தாராள மனப்பான்மை காட்டி அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்தல். சிறையில் பெசண்ட்! வருடாந்திர காங்கிரஸ் மகாசபைகளிலே பிரிட்டிஷ் அரசுக்குப் போட்ட விண்ணப்பங்களை யெல்லாம் மண்ணப்பங்களாக்கி அடக்கு முறையைத் தொடர்ந்து அமுல் நடத்தியது அரசு. இந்தச் சந்தர்ப்பத்திலேதான் டாக்டர் பெசண்ட் சுயாட்சிக் கிளர்ச்சியைத் தொடங்கினா ராதலால், அவர் மீதும் அடக்குமுறைச் சட்டம் பாய்ந்தது. பெசண்ட், வி.வி.வாடியா, டாக்டர் அருண்டேல் ஆகிய மூவரையும் கைது செய்து, உதகமண்டலத்திலுள்ள ஒரு பங்களாவில் அரசு காவலில் வைத்தது. இதனால், நடுத்தர மக்கள் கையில் இருந்த இந்திய தேசியமானது அடித்தளத்தி லுள்ள மக்கள் கைக்கும் எட்டியது. உலகறிந்த மாதரசியான பெசண்ட் சிறைப் பட்டதால் அப்போதைய அமெரிக்கக் குடியரசின் தலைவர் வில்சனும் கவலையடைந்தார். பிரிட்டினி லுள்ள நியாயஸ்தர்கள் தங்கள் தாயகத்தின் ஆட்சிக்கு எச்சரிக்கை விடுத்தனர். இந்தியாவிலே உயர் நிலையில் இருந்தவர்களில் சிலர் காங்கிரசிலே கலந்தனர். சேலம் சி. ராசகோபாலச்சாரியார், சென்னை திரு.வி.கலியாணசுந்தர முதலியார், அலகாபாத் இ.தே.நூ-6