பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காந்தியடிகளின் நிர்மாணத் திட்டம் நாகபுரியில் கூடிய 35ஆவது வருடாந்தரப் பேரவையிலே, காங்கிரசுக்கு வழிகாட்டும் பொறுப்பை ஒரு தீர்மானத்தின் வாயிலாகக் காந்தியடிகளிடம் ஒப்படைத்த பின்னர், அடிகள் சாதாரணப் பொது மக்களின் அமைப்பாக காங்கிரசை மாற்ற 13 அம்சத் திட்டமொன்றை வகுத்துத் தந்தார். அது வருமாறு. 1. சமூக ஒற்றுமை, 2. தீண்டாமை ஒழிப்பு, 3. மதுவிலக்கு, 4. கதர், 5. மற்ற கிராமத் தொழில்கள், 6. கிராம சுகாதாரம், 7. புதிய அல்லது அடிப்படைக் கல்வி, 8. முதியோர் கல்வி, 9. பெண்கள் முன்னேற்றம், 10. சுக வழியிலும் சுகாதாரத்திலும் போதனை, 11. தேசிய மொழியைப் பரப்புவது, 12. தாய் மொழியில் அன்பு கொண்டு, அதன் வளர்ச்சிக்குப் பாடுபடுதல், 13. பொருளாதார சமத்துவத்திற்காகப் பாடுபடுதல். நிர்மாணத் திட்டம் இந்த 13 அம்சத்திற்கு "காங்கிரஸ் நிர்மாணத் திட்டம்” என்று பெயர் தரப்பட்டது. “தேசியத் திட்டம்" என்ற பெயரும் பொருந்துந்தானே.