பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது * இந்தியா முழுவதற்கும் ஒரே கொடி - அது, மூவர்ண தேசியக் கொடி, * மாநிலங்களிடையே இணைப்பு மொழியாக ஒரே பொது மொழி - அது, இந்தியாவின் சொந்த மொழிகளில் ஒன்றான இந்தி மொழி. * இந்தியர் அனைவருக்கும் பொதுவான தேசிய உடை - அது, கையால் நூற்று, கையால் நெய்த கதருடை. இந்தியப் பெரு நாடு, பிரிட்டனில் உற்பத்தியாகும் பொருள்களுக்குச் சந்தையாக இருந்து வருவதையும், அதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலைந்து மக்கள் வறுமையுற்று வருவதையும் தவிர்க்கும் தொழில் திட்டம் - அது, கிராம கைத் தொழில்களை வளர்த்தல். இதற்காக, கதிர் - கிராம கைத்தொழில் சங்கம். * ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக நடத்தப்படவேண்டும். அதற்காக, பெண்களுக் குள்ள தடைகளைத் தகர்த்து, தளைகளையறுத்து அவர்களை முன்னேற்றப் பாடுபடுதல், அதற்காக, அனைத்திந்திய மாதர் சங்கம். சமுதாயத்தில் ஒழுக்கக்கேடும் பொருளாதாரச் சீர்குலையும் ஏற்படுவதற்குக் காரணமான மதுப் பழக்கத்தை ஒழிக்க முயலுதல், அதற்காக, அனைத்திந்திய மதுவிலக்குச் சங்கம்.