பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம்

  • இந்து - முஸ்லிம் ஒற்றுமை அடிப்படையில்

அனைத்துச் சமயங்களைச் சார்ந்தவர்களிடையில் சமூக ஒருமைப்பாட்டை ஏற்படுத்தல். * “எல்லோருக்கும் கல்வி" என்னும் அடிப்படையில் தொழிலோடு கூடிய கல்வியைத் தாய் மொழியின் வாயிலாக அளித்தல் - அதன் பெயர், தேசியக் கல்வி . * வயது வந்து முதியோர்களுக்குக் கல்வியளிக்க இரவுப் பள்ளிகளை நிறுவுதல். * தீண்டாமை என்னும் கொடுமையை ஒழித்துத் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியிலும் தொழிலிலும் குடியிருப்பிலும் மேம்பாடடையச் செய்தல். இதற்காகப் பாடுபட அனைத்திந்திய ரீதியில் தீண்டாமை ஒழிப்புச் சங்கம். * இந்தியரிலே ஒவ்வொருவரும் தத்தம் தாய் மொழியிடத்துப் பற்றுக் கொண்டு அதன் வளர்ச்சிக்குத் தொண்டு புரிதல். * கிராம சுகாதாரத்திற்கும் தேசத்தின் பொதுச் சுகாதாரத்திற்கும் பாடுபடுதல், * இந்தியாவின் அரசியல் குறிக்கோள், முடியுமானால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குட்பட்டு சுய ஆட்சி பெறுதல் - முடியாவிடில், பிரிட்டிஷ் ஆட்சி யிலிருந்து வெளியேறிப் பூரண சுதந்திரம் பெறுதல்.