பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 - இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது காந்தியடிகளின் 13 அம்சத் திட்டத்தால் ஏழை எளியவர்களெல்லாம் - குறிப்பாக, உழவர்களும் தொழிலாளர்களும் காங்கிரசை தங்களுக்கு நல்வாழ்வு தரத்தக்க ஒரே அமைப்பு என்று நம்பி, அதிலே சேரலாயினர். அது வரை காங்கிரசை நடத்தி வந்த மிதிவாதிகளிலேயும் சிலர் தீவிர தேசியவாதிகளாக மாறினர். மற்றுஞ் சிலர், போலிக் காரணங்களைச் சொல்லி காங்கிரசிலிருந்து வெளியேறினர். இந்த நேரத்திலேதான், “காந்தி பஞ்சகம்" பாடி, காந்தியடிகளின் தலைமைக்கு வரவேற்புக் கூறினார் பாரதியார். மக்களெல்லாம் காந்தி சொற்கேட்டார், காண்பார் விடுதலை கணத்தினுள்ளே" என்றும் "பாரத மாதா திருத்தசாங்கத்”தில் கூறினார். திலகர் நிதி காந்தியடிகள் தந்த நிர்மாணத் திட்டத்தைச் செயல் படுத்த ஓராண்டுக்குள் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்ட தேசிய காங்கிரஸ் பெஜவாடாவில் கூடிய அ.இ.கா.க. கூட்டத்திலே முடிவெடுத்தது. அப்போதுதான் காலமாகியிருந்த திலகர் நினைவாக "திலகர் சுயராஜ்ய நிதி" என்ற பெயரால் நிதி திரட்டத் தீர்மானித்தது. காங்கிரசில் அப்போதுதான் சேர்ந்திருந்த வார்தாவள்ளல் ஜமுனலால் பஜாஜ், ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து, சுயராஜ்ய நிதியைத் தொடங்கி வைத்தார். பத்துத் திங்களுக்குள்ளாகவே, திட்டமிட்டதற்கு அதிகமாக நிதி சேர்ந்துவிட்டது. ஆம், ஒரு கோடி 15