பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


8 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஆகவே, உடலுக்கு வலிமையைப் பெறுவது எப்படி என்று ஒரு வினா எழுகின்றதல்லவா! வலிமையைப் பெற விரும்பினால், வலிமையைப் பயன்படுத்திட வேண்டும். தேகத்தில் இருக்கின்ற வலிமையைக்கொண்டு தமக்குத் தேவையான வலிமையை உண்டாக்கி, தேக்கி வைத்துக் கொள்வது. அதாவது முதலாகப் பணம் வைத்துக்கொண்டு பணம் பண்ணுவதுபோல, முன்னது பயிற்சி விவகாரம். பின்னது முயற்சி வியாபாரம்.

பயிற்சிகளில் புத்துணர்ச்சி

ஆற்றலை அளிக்கின்ற உடற்பயிற்சிகளை மேல் நாட்டுப் பயிற்சிகள் என்றும் இந்திய நாட்டுப் பயிற்சிகள் என்றும் பிரித்துக் கூறுவார்கள் வல்லுநர்கள்.

ஆடுகளங்களில் ஆடப்படுகின்ற விளையாட்டுக்கள் எல்லாம் உடற்பயிற்சியின் வகையில் சேரா. அவை உடலுக்குத் தெம்பையும் மனதுக்கு ஆனந்தத்தையும் மொத்தத்தில் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையையும் விளையாட்டுக்களில் பங்கேற்பவர்களுக்கு உருவாக்கவும் உரமாக்கவும் உதவுகின்றன. -

ஆனால், உடற்பயிற்சிகள் உடலுறுப்புக்களையும் மன நிலையையும் பதப்படுத்தி இதப்படுத்துகின்றன. மெருகேற்றித் தரம் கூட்டுகின்றன. சோம்பலை நீக்கி சுகப்படுத்துகின்றன. அலையும் நினைவுகளையும் அடக்கி ஒருமுகப்படுத்துகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, புத்துணர்வையும் புதுப்பொலிவையும் கூட்டி வருகின்றன. உயிரூட்டித் தருகின்றன. -

இதிலிருந்து நாம் அறிந்து கொள்கின்ற ஒரு உண்மையானது. எல்லாவகையான உடற்பயிற்சிகளும்