பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

9



உடலுக்கு நலத்தையும் பலத்தையும் நீண்ட ஆயுளையும் தரவல்லவனாகவே இருக்கின்றன என்பது தான்.

இந்திய விளையாட்டுத்துறையை நாம் அணுகி ஆராயும் பொழுது. தனிப்பட்ட மனிதருக்கான உடற்பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதையே நம்மால் காண முடிகிறது. இந்திய விளையாட்டுத் துறையை ஆராயப்புகும் பொழுது. அது இதிகாச காலம், புராண காலம், பழங் காலம், முகமதியர் காலம், மராத்தியர் காலம், நவீன காலம் எனப்பிரிந்து நிற்பதையும், அவ்வப்போது பயிற்சி முறைகள் எவ்வாறு அவர்களிடையே இடம் பெற்றன. மாறி வந்தன. மலர்ந்து நின்றன என்பவையெல்லாம் நம்மால் காண முடிகின்றது. .

வேத காலம் (Vedic Age)

வேதகாலம் என்பது ரிக்வேத காலத்தியது. ரிக்வேதத் திலிருந்து, அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலை நன்கு புரிகிறது. அவர்கள் வாழ்க்கை இயற்கையோ டியைந்ததாக இருந்ததாலும், அவர்கள் உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்ததாலும், உடற்பயிற்சி என்று ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லாமல் இருந்தது.

வேதகாலத்து மக்கள் வேட்டையாடுவதை விரும்பிச் செய்தார்கள். குதிரை சவாரி செய்தல், (Riding), நடன மாடுதல், வாழ்க்கை பிரச்சினைக்காக இடம்விட்டு இடம் செல்லும் பொழுது ஏற்படுகின்ற தாண்டல், மலை ஏறுதல் முதலியவைகளில் ஈடுபடுதல், மண் தோண்டுதல் (Digging) மற்றும் வெறுங்கையால் சண்டை போடுதல், வில் அம்பு விடுதல், நீந்துதல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்ததால், அவர்களுக்கு இயற்கையாகவே உடல்