இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்
11
துவந்த யுத்தங்களும், வில் வித்தைகளும், கத்திச் சண்டைகளும், கதை (Club) யுத்தங்களும், தேரோட்டப் போட்டிகளும் இதிகாச காலத்தில் அதிகமாக இடம் பெற்றவையாகும். -
கில்லித்தண்டு விளையாடுவதில், பீமன் புகழ் பெற்றவன் என்ற குறிப்பும், மகாபாரதத்தில் காணப்படு கின்றது. -
புராண காலம் (Pauranic Age)
புராணகால மக்கள் மூச்சிழுப்பதின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் பிராணாயாமம் என்று கூறி, அதை அதிகமாகப் பயிற்சி செய்தார்கள். இது அவர்களுக்கு அளப்பரிய ஆற்றலைக் கொடுத்தது.
வேதம் ஒதுகின்றவர்கள், சண்டையிடுபவர்கள் வியாபாரிகள், வேலைக்காரர்கள் என்று இனம் பிரிந்து நின்று வாழ்ந்தாலும், எல்லோரும் உடலை வலிமையுடனும் வனப்புடனும் வைத்துக் கொள்வதில், ஆழ்ந்த கவனம் செலுத்தியிருக்கின்றார்கள்.
மூச்சிழுத்துவிடும் பிராணாயாமப்பயிற்சி, நுரையீரலை விரிவுபடுத்தி வலிமைப்படுத்தி, வாழ்க்கையை நீண்ட நாள் வாழவும்,நிம்மதிதரவும் பயன்தருகிறது என்பதை உணர்ந்து, செய்து, பயன் பெற்றிருக்கின்றார்கள். உடலை செட்டாகவும் சீராகவும் வைத்திருக்க இந்தப் பயிற்சியை செய்திருக் கின்றார்கள். அத்துடன், அவர்கள் வில்வித்தை, கத்திச் சண்டை, ஆயுதங்களை வைத்துக்கொண்டு சண்டை செய்தல் முதலியவற்றில் தேர்ந்தவர்களாகவும் திகழ்ந்திருக் கின்றார்கள்.