பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

13



குதிரைகளுக்கு முன்னேயும் தேர்களுக்கு முன்னேயும் ஓடுதல்.

பிறர் கையை முறுக்கிப் போராடும் போட்டிகள்.

மல்யுத்தப் போட்டிகள்.

வெறுங்கையால் குத்துச் சண்டை போடுகின்ற போட்டிகள்.

நாளந்தா பல்கலைக்கழகத்தில் நடந்த விளையாட்டுப் போட்டிகளை நாம் பார்க்கும்பொழுது, தனி மனிதன் திறமைக்கே முக்கியத்துவமும் முதலிடமும் கொடுக்கப் பட்டிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, வந்த அரசர்களும் அவ்வாறே தனிமனிதன் திறமையையே பாராட்டிப் பரிசளித்தும் இருக்கின்றார்கள். காந்தார மன்னர்கள் ஆண்ட காலத்தில், மல்யுத்த வீரர்களுக்கு அரண்மனையில் மிகவும் மரியாதை இருந்த காலம் உண்டு. அரசர்கள் அவர்களைப் போற்றினார்கள். பயிற்சி செய்ய இடம் தந்ததுடன், எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்கள்.

மல்யுத்த வீரர்கள் அதிகாலையிலேயே பயிற்சி செய்தார்கள். அவர்கள் பயிற்சி முறையில் அதிகமாக இடம் பெற்றவை எடை தூக்குதல். மணல் மூட்டைகள் எடைகளாகப் பயன் படுத்தப்பட்டன. அவைகளை காலால் உதைத்தும் தள்ளியும் தங்கள் கால்களுக்கு வலுவைத்தேடிக் கொண்டனர்.

கைகளுக்கு கரளா கட்டைகள் (Club) சுற்றுவதின் மூலம் பலம் பெற்றனர். பின்னர் மல்லர் கம்பம் (Malla Stumph) என்று ஒன்றைச் செய்து, அதை எதிரி என்று எண்ணி, பிடி போட்டுப் பழகி பயிற்சி செய்தனர்.