பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



உடற்பயிற்சியில் முதலிடம் பெற்றது தண்டால், பஸ் கி

அடுத்தது மல்யுத்தம். மூன்றாவது கரளா கட்டை சுற்றுதல், லெசிம். -

இத்தனைப் பயிற்சிகளும், அகலமாக மார்பை விரிவு படுத்துவதிலும், உடல் தசைகளை வலுப்படுத்துவதிலும், இளமை ததும்பும் தோற்றத்தைத் தருவதிலும் உதவின.

இவ்வாறு தண்டால்பஸ்கி பயிற்சிகளுக்கு முக்கியத் துவம் கொடுத்து, பயிற்சிக்கூடங்களை உருவாக்கிய பெருமை மகாராஷ்டிர மாநிலத்திற்குக் கிடைத்திருக்கிறது. அக்காலத் தில் வாழ்ந்த மக்கள். பயிற்சிக் கூட விதிகளுக்கு உண்மையாக அடிபணிந்து. பயிற்சி செய்து, திடகாத்திரமான மக்களாகவே வாழ்ந்து சிறந்தனர்.

நவீனகாலம்

நவீன காலம் ஆங்கிலேயர் ஆண்ட காலமாக ஆனது, மேல்நாட்டு விளையாட்டுக்கள் இடம்பெற்றன. சிறப்புமிக்கப் பயிற்சிகளான தண்டால் பஸ்கி போன்ற பயிற்சிகள், போற்றுவார் இன்றியும், ஏற்பார் இன்றியும் அடித்தளத்திற்குத் தள்ளிவிடப்பட்டன.

ஆங்கிலேயர்கள் இராணுவத்தையும், கப்பற்படையை யும் வலுப்படுத்துவதில் முனைந்தனரேயன்றி, இந்தியர்களை வலுப்படுத்த விரும்பவில்லை. மாறாக, இந்தியர்களைக் கட்டுப் படுத்தவும் முனைந்தனர். சில சமயங்களில், இந்தியர்கள் போர் ஆயுதங்களை வைத்துக் கொள்ளக்கூடத் தடை செய்யப்பட்டனர்.

ஆங்கிலேயக் கம்பெனிகளுக்கு எழுத்தர்களும், குமாஸ்தாக்களுமே தேவைப்பட்டனர். அதற்கான