பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள் 17

அடிப்படையில்தான் கல்வி முறையும் அமைக்கப்பட்டது. அவர்கள் கல்விமுறை மாணவர்களை அயர வைப்பதாகவும் இருந்தது. ஏற்கனவே, நாட்டில் விளையாடிய வறுமையும் சேர்ந்து, அவர்களை நாளுக்கு நாள் உடலில் வலுவிழந்தவர்களாக மாற்றிக் கொண்டே வந்தது. -

இன்னும் பல காரணங்களால் இந்திய விளையாட்டுத் துறை வளர்ச்சி குன்றிய நிலையிலிருந்து. வளர்ச்சியேயின்றி வாழ்கின்ற சூழ்நிலையிலும் வந்து நின்றது. -

சுதந்திர இந்தியா மலர்ந்த பிறகுதான். மக்கள் வளமும் நலமும் உள்ள உடலாளர்களாக விளங்க வேண்டும் என்ற நினைவு, தலைவர்கள் மனதில் இடம் பெற்றது. அதன் காரணமாக, இந்திய விளையாட்டுத் துறை கொஞ்சங் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. -

பள்ளிகளில் மாணவ மாணவியர் படிப்பில் மட்டுமன்றி, உடற்பயிற்சிகளிலும், விளையாட்டுக்களிலும் திறம் மிக்கவர்களாக விளங்க வேண்டும் என்பதில், இந்திய நாடு ஈடில்லா அக்கறை கொண்டிருந்தாலும், தமிழ்நாடு அரசு ஓர் படி மேலே சென்று, விளையாட்டுத் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.

மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடும் பொழுதே அவற்றை ஐயம் திரிபறக் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் பெருநோக்குடன், பள்ளிகளில் பாடத் திட்டங்கள் ஒன்றாகவும் இணைத்திருக்கின்றார்கள்.

அவற்றிலே ஒன்றாகத்தான் தண்டால் பஸ்கி பயிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. வீரர்களை உருவாக்கியதண்டால் பஸ்கிப் பயிற்சிகள். இந்திய நாட்டின் ஈடு இணையில்லாப் பயிற்சிகளாகும்.