இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்
21
தண்டால் பயிற்சியானது. மிகக் குறைந்த நேரத்திற்குள் உடல் உறுப்புக்கள் அனைத்தையும் இயக்கி உரிய பயன்களைக் கொடுத்து விடுகிறது. மேல் நாட்டாளர்கள் கூட தண்டாலின் மகிமையையும் மாட்சியையும் புரிந்துகொண்டு, தங்களுடைய உடற் பயிற்சி முறைகளில் தண்டால் பயிற்சியையும் இசைவுற இணைத்துக் கொண்டார்கள்.
தண்டால் பயிற்சியானது. உடலிலுள்ள தசைநார்கள் அனைத்திற்கும் சிறந்த வலிமையை வழங்குகின்றது. அத்துடன், நல்ல வலிமையுள்ள இருதயத்தையும் ஆக்கித் தருகின்றது.
தண்டால் பயிற்சி செய்வதால் இருதயத்திற்கு அதிக சுமையாகி விடுகின்றது. அதனால் இதயம் பாதிக்கப்படுகின்றது. பலவீனப்படுத்தப் படுகின்றது, என்றெல்லாம் தவறான கருத்துக்களைப் பரப்பி திசை திருப்பி விடுகின்ற தீயமனங் கொண்டவர்களும் நாட்டில் இருக்கின்றார்கள்.
இது தண்டாலைப் பற்றிப் புரிந்து கொள்ளாதவர்கள். கூறுகின்ற விதண்டாவாதமாகும். தண்டால் செய்யும் எண்ணிக்கையை விவரம் புரியாமல் அதிகப்படுத்திக் கொள்பவர்கள், உடனே உடலுக்கு வலிமை வேண்டும் என்று திடீர் ஆசையாலும் தீராத வெறியினாலும் அதிக நேரம் அதிக எண்ணிக்கையில் தண்டால் செய்கின்ற தவறுகளினால் ஏற்படும் கோளாறாகும்.
அதிகம் சாப்பிடுவதும் ஆபத்து என்கிற பொழுது அதிகப் பயிற்சியும் உடம்புக்கு ஆகாது என்பதையும் உணர்ந்து கொள்ளத்தான் வேண்டும்.
தண்டாலைப் புரிந்து கொண்டுதான் செய்ய வேண்டும் என்பதால், கீழே காணும் குறிப்புக்களை வாசகர்கள் நன்கு மனதில் முதலில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.