உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

23



தண்டால் பயிற்சிகள்

1. நேர் தண்டால் (Ordinary Dand)

பெயர் விளக்கம்

விரிந்திருக்கும் முழங்கால்கள் தரையில் பட, முன் பாதங்களும் தரையில் ஊன்றியிருக்க அமர்ந்திருந்து பின்னர் கைகளை முன்புறமாக வைத்தவாறு தண்டால் பயிற்சியைத் தொடங்கும் நிலையில் தொடங்கி, நேராகத் தரைவரை சென்று, பின் நிமிர்ந்து மேலே வந்து விடுகின்ற பயிற்சியின் தன்மையை ஒட்டியே இதனை நேர்த்தண்டால் என்று கூறியிருக்கிறோம்.

இதனை சாதா தண்டால், சாதாரண தண்டால் என்றும் கூறுவார்கள். Ordinary என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அகராதியில் கூறப்பட்டிருக்கும் அர்த்தங்களாவன. வழக்கமான, பொதுமுறையான, ஒழுங்கான, முறையான நேரான, சாதாரண என்பதாகும்.

சாதாரணம் என்று சொன்னால், மிக எளிதான என்பதற்கும், அதற்கும் கீழே சென்று தாழ்வைக் குறிக்கின்ற தன்மையில் அமைந்திருப்பதாலும் மற்ற தண்டால் முறைகளை உடலை வளைத்தும், நெளித்தும் செய்ய வேண்டிய நிலையில் அமைந்திருப்பதாலும், இதனை நேர் தண்டால் என்று நாம் குறித்திருக்கிறோம்.

தண்டால் தொடக்கநிலை

முன்பாதங்களை (Toes) தரையில் ஊன்றி, மடக்கி யிருக்கும் முழங்கால்களை முன்பக்கமாகத் தரையில் வைத்து, முழங்கால்களுக்கு முன்னால் உள்ளங்கைகள் படுமாறு தரையில் ஊன்றி, முதலில் அமர வேண்டும்.