உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

25



களாலுமே உடல் எடை முழுவதும் தாங்கப்படவேண்டும். முகம் கீழ் நோக்கி இருக்கவும்.

அடுத்து, கைகளை விறைப்பாக உயர்த்தி, நெஞ்சினை முன்புறமாகவும், மேற்புறமாகவும் வருவது போல உயர்த்தி, தலையை நிமிர்த்திய பிறகு, முன்போல தொடக்க நிலைக்கு வந்து விடவேண்டும்.

தரைக்கு இணையாக நேர்க் கோட்டுத் தன்மையில் உடலைக் கொண்டு செல்வதற்காகத் தயார் நிலையில் இருப்பதைக் காட்டுகிறது.

பின்னர், கைகளையும், கால்களையும் சிறிதுகூட இடம் விட்டு நகர்த்தி விடாமல், முதலில் அமர்ந்திருந்த நிலைக்கு வந்து விடவேண்டும். இது போல் பல முறை செய்து பழகவும்.

இந்த நேர்த் தண்டால் முறையை சரிவரக் கற்றுக் கொண்டால் தான், மற்ற தண்டால்களை எளிதாகவும் செய்ய முடியும் என்பதால், இதனை பிழையற, முறையுடன் கற்றுக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ளவும்!

2. தத்தும் தண்டால் (Frog Dand)

பெயர் விளக்கம்

தவளை தண்டால் என்றும் இதனைக் கூறுவார்கள். தவளையின் இயல்பான தத்திச் செல்லும் முறையே இத் தண்டாலின் செய்முறையாக அமைந்திருக்கிறது. தத்திச் செல்லும் தண்டால் என்றால் கேட்க இயல்பாகவும்