உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பிறகு, உள்ளங்கைகளை தரையில் பதித்து வைத்திருக்க இடது முழங்காலைக் கொண்டுவந்து இரண்டு கைகளுக்கும் இடையில் இருப்பதுபோல வைக்கவேண்டும்.

நெஞ்சு நிமிர்ந்திருக்க வேண்டும் பார்வை நேராக இருக்க வேண்டும்.

(படம் பார்க்க) படத்தில் முழங்கால் இரு கைகளுக்கும் இடையில் இல்லை. இதுபோல் பயிற்சி செய்வது தவறு இரு கைகளுக்கும் இடையில் இருப்பது போலவே தண்டால் செய்ய வேண்டும்.

ஆரம்பத்தில் இரு கைகளுக்குமிடையில் காலை வைத்துத் தண்டால் எடுப்பது மிக சிரமமாக இருக்கும். சரியாக செய்ய வேண்டும் என்று வலிந்து செய்வதும் உடலுக்கு வலியையும் மன எரிச்சலையும் கொடுக்கும் என்பதையும் மறந்து விடக்கூடாது.

இடதுகாலை இரு கைகளுக்கிடையில் கொண்டு வந்தபிறகும், வலது கால் நீட்டிய நிலையில் அதே இடத்தில்தான் இருக்கவேண்டும்.

இரண்டாம்நிலை: பிறகுகைகளைத் தளர்த்தி, உடலை தரைக்கு இணையாக நேர்க்கோட்டளவில் கொண்டு வந்து (நேர்த் தண்டால் எடுப்பது போல) பிறகு முன்போன்ற நிலைக்கு வரவும்.

குறிப்பு: 1. தரைநோக்கிச் சென்று உடலை தரைக்கு இணையாக வைத்திருக்கும் பொழுது (Dip) முகத்தை இடது புறமாகத் திருப்பி இருக்கவேண்டும். பின்னர், மேலே