உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


செய்முறை

முதல் நிலை: நேர்த் தண்டாலுக்கு இருப்பதுபோல இருந்து, உள்ளங் கைகளிலும், முன் பாதங்களிலும் உடல் ஏற்கப்பட்டிருப்பது போல வைத்து, ஒற்றைக் கால் தண்டாலுக்கு இருப்பதுபோல, வலது காலை மடித்து, ஊன்றியுள்ள இரு கைகளுக்கும் மத்தியில் வைத்திருப்பது முதல்நிலை. இந்தத் தொடக்க நிலையில் இடது கால், இருக்கின்ற அதே இடத்தில் விறைப்பாக நீட்டப்பட்டிருக்க வேண்டும். தலையும் நெஞ்சும் நிமிர்ந்திருக்கவும்.

இரண்டாம் நிலை:

இப்பொழுது இடது காலை முன்புறம் நீட்டியிருந்த

நிலையிலிருந்து முன்புறத்தி லிருந்து கொண்டு வந்து விறைப்பாக நீட்டவும். (இந்த நிலையில் உடலின் எடை முழுவதும் வலது முழங்காலின் மேல் இருக்கிறது என்பதைக் கவனிக்கவும்.)

முதல் படத்தைப் பாருங்கள். இடது கைக்கு முன்னால், இடது காலைக் கொண்டு வந்து முன்புறமாக விறைப்பாக நீட்டப்பட்டிருக்கும்.

இதைத் தொடர்ந்து இடது காலை சுற்றி முழுக்க ஒரு சுற்று சுற்றிக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் சக்கரத் தண்டால் முறை.

இடது கையருகே உள்ள காலை சுற்ற வேண்டுமானால், ஊன்றப்பட்டிருக்கும் இடது கையை எடுத்திட வேண்டும். ஆகவே, இடது கையை சுறுசுறுப்புடன் உடனே எடுத்து,