உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

33


இடது கால் செல்ல இடமளித்து விட்ட உடனே அதே இடத்தில் இடது கையை ஊன்றிக் கொள்ள வேண்டும்.

பிறகு, வலது கையைத் தூக்கி இடது காலைப் போல அமைத்துவிட்டு, உடனே வலதுகையைத் தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு இடது கால் அரைவட்டம் முன்புறத்தில் போட்டு, முன்பிருந்த இடத்திற்குச் சென்று, பிறகு முன்புறமாக வந்து விறைப்புடன் நீட்டப்பட்டிருக்க வேண்டும். இதுதான் சக்கரத் தண்டால் முறையாகும்.

குறிப்பு: சுழலச் செய்கின்ற ஒரு காலை எடுத்து தண்டாலைத் தொடங்கிவிட்டால், அந்த முழுச் சுற்றும் முடியும் வரை இடையே நிறுத்தக்கூடாது.

கால் முழுமையாக சுற்றிட உதவுவதுபோல், முதலில் இடது கையையும், பிறகு வலது கையையும் மேலே தூக்கி, கால் போனபிறகு உடனே, முன்பிருந்த இடத்திலே கொண்டு வந்து வைக்க வேண்டும். கையை உயர்த்துவதை மிகவும் சுறுசுறுப்புடன் செய்ய வேண்டும்.

இடது கால் இரு கைகளையும் கடந்து வந்து வலது கால் புறத்திற்கு வரும்பொழுது, வலது காலையும் சற்று மேலே உயர்த்தி, இடது கால் செல்லும் அளவுக்கு வழியும் இடமும் விட்டுவிட்டு, உடனே அதே இடத்தில் வலது காலை ஊன்றிக் கொள்ள வேண்டும்.

ஒரு சுற்று சுற்றிய உடன், நேர்த் தண்டால் வந்து விடவேண்டும். பிறகு, இடதுகாலில் இருந்து வலது காலால்