பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


சக்கரம்போல சுற்றிட வேண்டும். இவ்வாறு கால் மாற்றி காலை சக்கரம்போல சுற்ற வேண்டும்.

ஆரம்பகாலத்தில் மிக மெதுவாகச் செய்யவும். கைகளும் கால்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தண்டால் முறையாகும். உடல் எடையும் அவ்வப்போது இடம் மாறி வருவதால், கைகள் கால்கள் பிசகிக் கொள்ளாமல், மிகவும் கவனத்துடனும் செய்து பழகிக் கொள்ள வேண்டும்.

பயிற்சியில் பழக்கம் ஏற்பட்டு, நன்கு செய்யப் பழகிக் கொண்டு விட்டால், சக்கரத் தண்டால் செய்வதற்கு மிகவும் அழகாகவும் இருக்கும், பார்ப்பதற்கு அற்புதமாகவும் இருக்கும்.

6. பாம்புத் தண்டால்(Snake Dand)

பெயர் விளக்கம்:

நேர்த் தண்டால் செய்கின்ற முறையிலிருந்து, பாம்பு ஊர்ந்து செல்வதுபோன்ற அமைப்பில் கைகளையும் கால்களையும் மாற்றி மாற்றி எடுத்துவைத்து முன்புறம் செல்லவும், அதே சமயத்தில், கால்களை ஒன்றுக்கிடையில் ஒன்றை நுழைத்துக் கொண்டுவந்து அதாவது உடலைத் திருப்பியும் நெளித்தும் முன்னோக்கிச் செல்கின்ற முறையில் தண்டால் அமைந்திருப்பதானது, பாம்பு செல்வதைப் போன்று இருப்பதால். இதற்கு பாம்புத்தண்டால் என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்.

செய்முறை:

முதல் நிலை: நேர்த் தண்டால் செய்கின்ற இரண்டாம் நிலையில் நிற்கவும். அதாவது, தரைக்கிணையாக நேர்க்