36
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
காலுக்கு அடியிலும் நுழைத்து வைத்தவாறு முன்னேறிச் செல்ல வேண்டும்.
ஒவ்வொரு பக்கமாக மாற்றிச் மாற்றிச் செய்ய வேண்டும்.
கைகளில் உடலின் முழு எடையும் தேங்கியிருப்பதால், கைகளை எடுக்கும் பொழுதும், வைக்கும்பொழுதும், மிகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இல்லையேல், கைகள் மடங்கிப் பிசகிக்கொள்ள, முகம் கவிழ்ந்து கீழே தரையில் மோதிக்கொள்ள நேரிடும். ஆகவே, மிகவும் நிதானத்துடன் இந்தத் தாண்டாலைச் செய்யவேண்டும்.
இத் தண்டால் பயிற்சியினால், முதுகுப்புறத் தசைகள். நன்கு வலிமையடைகின்றன. மார்புப் பகுதி மேலும் விரிவடையும் வாய்ப்பும் பெறுகிறது.
7. நேர் எதிர்த் தண்டால் (Reverse Dand)
பெயர் விளக்கம்
பொதுவாக, நேர்த் தண்டால் முறையில் இரு கைகளையும் ஊன்றி, கால்களைப் பின்புறமாக நீட்டி, பின்னர், தரைநோக்கி இணையாக நேர்க் கோட்டளவில் உடலைக் கீழ் புறமாகத் தள்ளி, பிறகு முதல்நிலைக்குமேலுயர்ந்து வருவதை நாம் அறிவோம்.
இந்தத் தண்டால் முறையில், நேர்த்தண்டால் முறையில் முதலில் முழங்கால்களைத் தரையில் வைத்து உட்கார்ந்து, பிறகு பிட்டத்தை மேலே உயர்த்தியும் கைகளை விறைப்பாக நிமிர்த்தியும், அங்கிருந்து கீழ்ப்புறமாகக் குனிந்தும், பிறகு உடலை வில்லாக வளைத்தும் நேர் எதிரான முறையில் தண்டால் செய்யப்படுவதால், இதற்கு நேர் எதிர்த் தண்டால் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.