பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

37


செய்முறை

முதல் நிலை: (முதல் படம் பார்க்க) கைகள் இரண்டையும் தோள்களின் அளவிற்கு அகலமாக வைத்து, கால்களையும் இயல்பான தூரம் இருப்பதுபோல பிரித்து, முதுகுப்புறத்தைசமப்புறமாக அமைந்திருப்பதுபோல வைத்து முதலில் நிற்கவும்.

இரண்டாம் நிலை: (இரண்டாம் படம் பார்க்க) தலையையும் நெஞ்சுப் பகுதியையும் ஊன்றியுள்ள கைகளிருக்கும் உட்புறமாகக் கொண்டுவந்து தலை தரையைப் பார்த்திருப்பது போன்ற நிலையில் வைத்திருக்கவும். முழங்கால்கள் விறைப்பாக இருப்பதுபோல மாறியிருப்பதைக் கவனிக்கவும்.

மூன்றாம் நிலை: பிறகு, தலையை மேற்புறமாக உயர்த்தி, உடலை வில்போல வளைத்துச் செய்யவேண்டும். இப்பொழுது உடலின் எடை கைகளிலும், முன் பாதங்களிலுமே இருப்பதைக் காணலாம்.

பின்னர், இரண்டாம் நிலைக்கு உடலைக் கொண்டு வந்து, அதன் பின் முதல் நிலைக்கு வரவேண்டும்.

இந்தத் தண்டாலில், கழுத்து வளைவதையும், நிமிர்ந்து விடுவதையும் கவனத்துடன் செய்திடல் வேண்டும்.

8. தேள் தண்டால்(Scorpion Dand)


பெயர் விளக்கம்

இந்தத் தண்டால் செய்திருக்கின்ற நிலையில் பார்த்தால் தேள் ஒன்று தன் கொடுக்கினைத் (வால்) தூக்கிக்கொண்டு நிற்பதுபோன்ற ஓர் தோற்றத்தை அளிப்பதால், இதனை தேள் தண்டால் என்று அழைத்திருக்கின்றார்கள்.