பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள் 39

ஆகவே நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இந்தத் தக டால் பயிற்சியைச் செய்யவேண்டும். ஒரு காலை இறக்கி மறுகாலை ஏற்றும்பொழுது இன்னும் கவனம் வேண்டும்.

9. Sirsaļiò ssirLirso (Leaping Dand)

பெயர் விளக்கம்

தண்டால் தொடக்க நிலையிலிருந்து முன்புறமாகவே அல்லது பின்புறமாகவோ தாவிச்சென்று (Leap) தரையில் மகபதித்துதண்டால் எடுத்துவிடும் முறையில் இதற்குதாவும் தண்டால் என்று பெயர்.

செய்முறை

தொடக்க நிலை: நேர்த் தண்டால் எடுப்பதற்காக அமரும் முதல் நிலைதான் இதன் தொடக்க நிலையாகும். அதாவது, முழங்கால்களை தோள்களின் அகல அளவு இருப்பது போல தரையில் வைத்து, உள்ளங்கைகளை முன்புறமாக ஊன்றி, பிட்டங்கள் குதிகால்களில் பட அமர்ந்திருப்பதுதான் ஆரம்ப நிலையாகும்.

இரண்டாம் நிலை: ஆரம்ப நிலையில் அமர்ந்திருந்து முன்புறமாகத் தாவிச் சென்று தரையில் கைகளை ஊன்றி, பின் கைகளை மடித்து தரைக்கு இணையாக நேர்க் கோட்டளவில் உடலை கீழ்ப்புறமாக அழுத்தித் (Dip) தண்டால் எடுக்கவும். பிறகு அந்த நிலையிலிருந்து பின்புறமாக அதேபோல் தண்டால் எடுக்கவும்.

குறிப்பு: முன்புறமாகத் தாவிக் கைகளை ஊன்றும் பொழுது, மிகவும் எச்சரிக்கையுடன் ஊன்ற வேண்டும். சற்று வறுக்கு மாறாக கைகளைப் பதித்தால் கை பிசகிக் கொள்ள நேரிடும்.