உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

41



முழங்கைகளை மடக்கும் பொழுதும், அவசரமில்லாமல் நிதானமாக தண்டாலை செய்யவேண்டும்.

முன் நெற்றியால் தரையினைத் தொடும் பொழுது, நெற்றி மட்டுமே தரையைத் தொடவேண்டும். முன் பாதங்களையும் உள்ளங்கைகளையும் தவிர வேறு உடலின் எந்தப் பகுதியும் தரையின்மேல் படக்கூடாது.

11. கைதட்டித் தத்தும் தண்டால்

(Frog Dand with Clapping of Hands)


பெயர் விளக்கம்

நேர்த் தண்டால் முறையில் இருந்து தவளைபோல தத்தித் தாவிச் செய்யும் தண்டாலின் போது, தரையில் கைகள் ஊன்றுவதற்கு முன்பாக கைதட்டிவிட்டு, பிறகு ஊன்றுவதால், இதற்கு கைதட்டித் தத்தும் தண்டால் என்று பெயர் வந்தது.

செய்முறை

முதல் நிலை: நேர்த் தண்டாலின் ஆரம்ப நிலையில் அமர்ந்த பிறகு கால்களைப் பின்புறமாக நீட்டி, உள்ளங்கைகளுக்கு இடையில் நெஞ்சுப் பகுதி இருப்பது போல தரைக்கு இணையாக இருக்க வேண்டும்.

இரண்டாம் நிலை: இந்த முதல் நிலையிலிருந்து உள்ளங்கைகளையும் முன் பாதங்களையும் தரையில் வேகமாக அழுத்தி உந்தி. உடலை மேலே தூக்கி உயர்த்த வேண்டும். இப்பொழுது தரைக்கு மேலே உடல் உயர்ந்து விட்டிருக்கிறது.