42
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
தரையின் தொடர்பு இல்லாமல் உடல் தனியே அந்தரத்தில் ஒரு நொடி நேரம் தான் இருக்கும். இதற்குள் இரண்டு கைகளையும் நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வந்து தட்டி சத்தம் எழுப்பி விட்டு, உடனே கைகளைத் தரையில் ஊன்றி முதல் நிலை போல இருந்திட வேண்டும்.
குறிப்பு: மிகவும் எச்சரிக்கையுடன் இந்தக் கைதட்டும் நேரத்தில் தண்டால் செய்ய வேண்டும். இல்லையேல், முகமும் நெஞ்சும், உடற்பகுதியும் தரையில் மோதிட நேரிடும்.
இதுபோல் பலமுறை செய்க.
(Leaping Dand with Clapping)
பெயர் விளக்கம்
தாவும் தண்டால் செய்யும் பொழுது, தரையை உள்ளங்கைகள் தொடுவதற்குமுன், கைதட்டி ஒலி எழுப்பிவிடும் ஆற்றல் முறைக்கே கைத் தட்டித் தாவும் தண்டால் என்று பெயர்.
செய்முறை
முதல் நிலை: நேர்த்தண்டால் செய்வதற்குரிய ஆரம்ப நிலையில் முதலில் இருந்து, பின்னர் தரைக்கு இணையாக உடலைக் கொண்டுவந்து இருப்பது முதல் நிலையாகும்.
இரண்டாம் நிலை: உடலைத் தூக்கியவாறு முன் புறமாகத் தாவி, உள்ளங் கைகளைத் தரையில் ஊன்றுவதற்குள், நெஞ்சுக்கு முன்புறமாகக் கைகளைக் கொண்டுவந்து கைதட்டி ஒலி எழுப்பி, தரையில் கைகளை ஊன்றி, தண்டால் எடுத்து, பின்னர் மேலேழுப்பி வந்து பின்னர் குதிகால் உட்காரும் நிலைக்கு வரவேண்டும்.