உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

43



குறிப்பு: தாவி விழுவதற்கு முன்னர் கைதட்ட வேண்டும். கைதட்டிய உடனே கைகளை ஊன்றி விட வேண்டும். இதற்கு இடைப்பட்ட நேரம் மிகவும் குறைவென்பதால், விரைவுடன் செய்து விடவேண்டும். மிகவும் கவனத்துடன் இந்தப் பயிற்சியை செய்திருக்க வேண்டும்.

தண்டால் பயிற்சிகளை ஒரு முறைமட்டும் செய்தால் பயனில்லை. பலமுறை தொடர்ந்தாற்போல் செய்தால் தான் பலன் பெறமுடியும் என்பதால், தொடர்ந்து பலமுறை செய்யவும். அதே சமயத்தில், உடலை வருத்திச் செய்கின்ற தன்மையிலிருந்தும் விடுபடவேண்டும்.

பயிற்சி செய்யும்பொழுது, உடலுக்கு பலம் பெறுவது போன்ற நிலையினை உணர்வதுதான் பயிற்சி செய்வதில் பயன் பெறும் நிலையுமாகும்.