பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அதே நேரத்தில், மேல் நாட்டு மல்யுத்த வீரர்கள், அகன்ற மார்பும், திரண்ட கைப் பகுதிகளையும் கொண்டிருந்தாலும், குச்சி போன்ற கால்களையும் உடையவர்களாகத் தோன்றினார்கள். காரணம், அவர்கள் கால் தசைகளின் மேல் அதிகக் கவனம் கொள்ளவில்லை. அதுவே அவர்கள் தோல்விக்கும் காரணமாக அமைந்திருந்தது.

பஸ்கிகளைச் செய்துவந்த இந்திய மல்யுத்த வீரர்கள் கால் இயக்கத்தில் (Foot-work) சிறப்பாக இயங்கினார்கள். உடலை சுறுசுறுப்பாக இயக்குவதில் வேகம் பெற்றிருந்தார்கள். அதிகமான நெஞ்சுரமும் உடையவர்களாகவும் விளங்கினார்கள். உடலில் அதிக வலிமையுள்ளவர்களாகவும் திகழ்ந்தார்கள். இதற்கெல்லாம் அடிப்படையாக அமைந்து உயிரூட்டிய்து பஸ்கிப் பயிற்சிகள் என்றால், அது மிகையல்ல. அதுவே உண்மையாகும்.

மெதுவாகச் செய்கின்ற பஸ்கிப் பயிற்சி, பயிற்சியாளருக்கு சிறந்த கால் இயக்கத்தையும் உணர்ச்சிமிக்க கால் தசைகளையும் வளர்த்துவிடுகிறது.

விரைவாகச் செய்கின்ற பஸ்கிப் பயிற்சி, உடல் இயக்கத்தில் வேகத்தையும் விறுவிறுப்பையும் அளிப்பதுடன் செயலில் சுறுசுறுப்பையும் ஊட்டிவிடுகிறது.

அதிக எண்ணிக்கையில் செய்கின்ற பஸ்கிப் பயிற்சியினால் நெஞ்சுரம் (Stamina) அதிகமாகக் கிடைக்கிறது.

தொடைத் தசைகள், உடற்பகுதியிலுள்ள எல்லா தசைகளிலும் நீண்ட தன்மையுடையவை. வலிமையும் உடையவை. இவற்றை வளர்ப்பதற்குரிய சிறந்த பயிற்சி பஸ்கிதான். நின்றவாறே குதித்தும் விரைவாக உட்கார்ந்து எழுகின்ற பஸ்கிப் பயிற்சிகள். கெண்டைக்கால் தொடைத் தசைகளை சக்திமிக்கதாக ஆக்குவதுடன், தசைநார்களின்