பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


முன்னுரை

இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள் எனும் தலைப்பில் வெளிவந்திருக்கும் இந்நூலில், இந்திய நாட்டின் தலைசிறந்த உடற் பயிற்சிகளாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் தண்டால், பஸ் கி, இவற்றினைஎழிலுறச்செய்து பயன்பெறும் முறைகள்பற்றிமுறையாக விளக்கப்பட்டிருக்கின்றன. -

முதல் முறையாக இந்த அரிய முயற்சியினை தமிழில் கொண்டுவர முயற்சித்து, ஒரளவு வெற்றியும் பெற்றிருக்கிறேன் என்று நினைக் கிறேன். பல ஆண்டுகளாக எழுத முயன்று, அடிக்கடி தோன்றிய ஐயங்களினால் அல்லல்பட்டு, தெளிந்துகொள்ள இயலாத நிலையில் தயங்கி நின்றும், மயங்கி நின்றும் மலைத்துப் போய் முயற்சியை அப்படியே நிறுத்தி விட்டிருக்கிறேன்.

இருந்தாலும், மனதுக்குள் உதித்த நினைவு மறைந்து போய் விடவில்லை. போகும் இடங்களில் எல்லாம் இதுபற்றிய குறிப்பினை சேகரிக்க முயன்றேன். துளித்துளியாகப் பெற்ற அனுபவங்கள் இப்பொழுது எழுதிடும் துணிவை எனக்குத் தந்தன. தொடர்ந்து என் முயற்சியை மேற்கொண்டேன். -

இம்முயற்சியே இப்பொழுது நூல் வடிவம் பெற்றிருக்கிறது. தண்டால் பஸ் கிப் பயிற்சிகளைப் பற்றிய குறிப்புக்களை சுருக்கமாகவே விவரித்துள்ளேன். எளிமையாகத் தோன்றும் பயிற்சிகளான இவற்றைத் தொடர்ந்து செய்தால் எண்ணற்ற பயன்களைப் பெறலாம் என்று எண்ணிச்செய்து எழிலுறத் திகழ்ந்த நம் முன்னோர்கள், சிறந்த வழிகாட்டிகளாகத் திகழ்கின்றார்கள்.

வரலாற்றுச் சிறப்புப் பெற்ற தண்டால் பஸ்கிப் பயிற்சிகள், காலத்தின் கோளாறால், மிக அற்பமாக எண்ணப்படுகின்ற நிலையில் இருப்பதையும் நாம்காண்கிறபொழுது, வேதனையாகவும் இருக்கிறது. வேதனை தரும் சோதனையையும் வென்று, இன்று இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள் இளம் தலைமுறையினரிடையே வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன. -

ஆமாம், தமிழ்நாடு அரசின் தனிப்பெரும் தொண்டினால், பள்ளிகளில் எங்கும் கட்டாய உடற்கல்விப் பாடம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு இந்திய நாட்டுத் தேகப்