48
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
படுகின்றனர் என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
பஸ்கி செய்யும்பொழுது ஒருசில குறிப்புக்களைப் பின்பற்றினால் நல்லது.
கால்களுக்கு இடையேயுள்ள இடைவெளியை ஏற்ற அளவில் (அதிகக் குறைவாகவோ அதிக இடை வெளியுடனோ இல்லாதவாறு) இருப்பதுபோல் வைத்துக் கொள்வதில் கவனம் வேண்டும்.
சுவாசத்தை இழுப்பதிலும், வெளிவிடுவதிலும் ஒரே சீரான தன்மை இருப்பதை பயிற்சிநேரம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆரம்ப காலத்தில், பயிற்சியின் எண்ணிக்கை குறைந்த அளவில் இருப்பது நல்லது. எண்ணிக்கை குறைந்த அளவு இருப்பது போலவே, குறைந்தகால அளவில் செய்து பிறகு எண்ணிக்கையையும் கால அளவையும் மிகுதிப் படுத்திக் கொண்டு போகவேண்டும்.
இனி, பஸ்கிப் பகுதிகளைக் காண்போம்.
பலம்தரும் பஸ்கிப் பயிற்சிகள் (Baithaks)
1. நின்று செய்யும் பஸ்கி (Standing Baithak)
பஸ்கியைத் தொடங்கும் நிலை:
கால்களை இயல்பான இடைவெளி இருப்பதுபோல் விரித்து நில், கைவிரல்களை மூடியவாறு, பக்கவாட்டில் வைத்து நிமிர்ந்து நேராக நில்.
செய்முறை நிமிர்ந்து நிற்கின்ற நிலையிலிருந்து, ஒரு துள்ளு துள்ளி (Jump) அதே இடத்தில் குதிக்கலாம் அல்லது சற்றுமுன் தள்ளியும் உட்காரலாம். அவ்வாறு குதித்து