இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்
49
உட்காருகின்ற நிலையில் கைகளிரண்டையும் அந்தந்தப் பக்கத்திலே இருப்பதுபோல, முழங்கை மடித்து தோள்பட்டை யில் கட்டைவிரலை வைத்து அமரவும்.
உடலின் எடை முழுவதும், முன்பாதங்களில் இருப்பது போல முன் பாதங்களிலேயே உட்கார்ந்திருக்க வேண்டும்.
முழங்கால்கள் இரண்டும் பக்கவாட்டில் இருப்பது போல இருந்திருக்க வேண்டும்.
மீண்டும் தொடங்கிய நிலைக்கே திரும்பிவந்து நிற்கவேண்டும்.
குறிப்பு: உட்கார்ந்த நிலையிலும் உடலை நிமிர்த்தி நேராக உட்காரவும். கைகால்கள் உடல் முழுதும் விறைப்பாகவும் நேராகவும் இருப்பதுபோல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நின்று செய்யும் பஸ்கி முறையிலே வேறு சில முறைகளிலும் செய்முறைகள் உண்டு அவைகள் கீழே தரப்பட்டுள்ளன.
1. நின்ற நிலையிலிருந்து துள்ளிக் குதித்து கீழே முன் பாதங்களில் உட்காருகின்ற பொழுது இரு கால்களையும் சேர்த்து உட்காராமல் இடது காலை முன்புறமாக (Forward) வைத்து உட்காருதல் கைகள் வைக்கும் நிலையில் மாற்றம் இல்லை. பிறகு துள்ளிக் குதித்து நின்ற நிலைக்கு வந்துவிட வேண்டும்.