பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

(இ) மூன்றாம் வகை பஸ்கி:

முழங்காலிட்டு உட்காரும் நிலையிலிருந்து, இந்த பஸ்கியையும் தொடர வேண்டும்.

முழங்கால்களில் வைத்திருந்த இரு கைகளையும் எடுத்தபிறகு, இடது கையைக் கொண்டுவந்து, உள்ளங்கை கீழ் நோக்கி இருக்குமாறு நெஞ்சுக்கு அருகில் கொண்டு வந்து, இடக்கை கட்டை விரல் நெஞ்சினை நோக்கிக் காட்டியிருக்க, வலது கையை வலப்புறத்திலிருந்து, தரைக்கு இணையாக இருப்பதுபோல தோள் மட்டத்திற்குக் கொண்டு வந்து சமநிலையாக வைத்து நீட்ட வேண்டும்.

இடப்புறம் செய்ததுபோலவே வலப்புறமும் செய்ய வேண்டும். பிறகு, அடுத்தடுத்து மாறி மாறிச்செய்ய

வேண்டும்.

3. Biosmósmi Lismó4) (Namaskar Baithak)

தொடங்கும் நிலை:

முழங்காலிட்டுச் செய்யும் பயிற்சிக்கெல்லாம் 12 அங்குலம் இடைவெளி இருப்பதுபோல, முழங்காலிட்டு

உட்கார வேண்டும்.

முழங்கால்களுக்கு முன்னுள்ள தரையில், உள்ளங்கைகளை வைத்துக் கொண்டிருக்க வேண்டும். (படம் 12 பார்க்கவும்)

அப்பொழுது, நெஞ்சும், முழங்கைகளும் விறைப்பாகவும் நேராகவும், பின்புறம் குழிப் பகுதியாக இருப்பது போலவும், தலையை நிமிர்த்தி நேராகப் பார்ப்பது போலவும் இருக்க வேண்டும்.