உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

53



(எண்ணிக்கை ஒன்று)

செய்முறை: முழங்காலிட்டு தொடங்கும் நிலையிலிருந்து கைகளை முன்புறமாக மடக்கிக்கொண்டு, முன் புறமாகக் குனிந்து, முன் நெற்றியால் தரையைத்தொடவும்.

(எண்ணிக்கை இரண்டு)

குறிப்பு: முன்னே குனிந்து முன்னெற்றியால் தரையைத் தொடும்பொழுது, முழங்கால்களை நகர்த்தக் கூடாது. கைகளையும் பயன்படுத்தக் கூடாது.

இங்கே குறிப்பிட்டிருப்பதுபோல, ஒன்று இரண்டு என்ற எண்ணிக்கையில் நமஸ்கார் பஸ்கியைச் செய்யவும்.

இதேபோல், இந்த பஸ்கியை பலமுறை செய்யவும்.

4. நாற்காலி பஸ்கி (Chair Baithak)

தொடங்கும் நிலை:

நின்ற நிலையிலிருந்து இந்த பஸ்கியை தொடங்கவேண்டும்.

பின்னர், முழங்கால்களைப் பாதியளவு மடக்கி, (நாற்காலியில் அமரும் பாவனையில்) அரைக்குந்தல் குந்தி (Half Squat), முன்புறம் இரண்டு கைகளையும் விறைப்பாக நீட்டி, உள்ளங்கைகள் வெளிப்புறம் பார்த்திருப்பது போல, விரல்களைக் கொக்கிபோல் பிடித்து பிணைத்துக் கோர்த்துக் கொள்ளவும்.

நீட்டி கோர்த்துக் கொண்டிருக்கும் கைகள், நெஞ்சுக்கு நேராக விறைப்பாக நீட்டப் பட்டிருக்க வேண்டும்.