பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

55



செய்முறை:

இந்த நிலையிலிருந்து, குதித்தவாறு இடதுகாலை முன்னேயும், வலது காலை பின்னேயும் கொண்டு செல்லும் பொழுதே, இடது கையை நெற்றிக்கருகேயும், வலது கையை முதுகுக்குப் பின்புறமும் கொண்டு செல்ல வேண்டும்.

பிறகு, வலது கால் முன்புறம் சென்று இடது கால் பின்புறம் வருமாறு தாண்டிக் குதிக்கும்போது, வலது கை நெற்றிக்கருகிலும், இடதுகை முதுகுக்குப் பின்புறமும் கொண்டு செல்ல வேண்டும்.

குறிப்பு: குதித்து கால் மாற்றி நிற்கும் பொழுதும், தொடக்க நிலையில் முழங்கால்களை மடித்து நின்றது போல்தான் நிற்க வேண்டும்.

குதித்துத் திருப்பும்பொழுது கால்பாக அளவு திரும்புவது போல் இருக்க வேண்டும்.

நெற்றிக்கு முன்புறம் வரும் கையின் உள்ளங்கையானது வெளிப்புறம் நோக்கியிருப்பது போல வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு கால் மாற்றிச் செய்யும் பொழுது கையையும் மாற்றி முன் நெற்றிக்கருகே கொண்டு வரவேண்டும்.

இடது கால் முன்னே வரும்பொழுது இடதுகையையும் வலதுகால் முன்னுக்கு வரும்பொழுது வலதுகையையும் நெற்றிக்கருகே கொண்டு வரவேண்டும்.