பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

57


அதேபோல் பக்கவாட்டிலும் (Side Ward), புறமாகவும் (Back Ward) குதித்து அமருகின்ற நேர் நிலை பஸ்கியையும் செய்யவும். (விரிவான குறிப்புக்கு 1வது 'நின்று செய்யும் பஸ்கியில்' கூறியுள்ளதைக் காண்கவும்).

7. ஒரு கை இயக்கப் பஸ்கி
(Baithak with Single Arm Movement)

தொடங்கும் நிலை:

இந்த பஸ்கியானது முழங்காலிட்டுச் செய்யும் பஸ்கியாகும். தோள்களின் அகல அளவுக்கு கால்களின் இடைவெளியை விரித்து நின்று, அப்படியே முழங்காலிட்டு அமர்ந்து, முழங்கால்களுக்கு முன்னே தரையில் கைகளை வைத்து, நெஞ்சை நேராக நிமிர்த்தி குதிகால்களின் மீது பிட்டம் (Buttock) இருப்பதுபோல உட்கார்ந்திருக்கவும் (படம் 12 பார்க்கவும்)

நெஞ்சும் முழங்கைகளும் விறைப்பாக இருக்க, முதுகின் பின்புறம் உட்குழிவு இருப்பது போல் வைத்து தலையை நிமிர்த்தி வைத்து, நேராகப் பார்த்து அமர்ந்திருக்கவும்.

செய்முறை:

முழங்கால்களுக்கு முன்னே உள்ளங்கைகள் தரையில் பதிந்திருப்பது போல் வைத்திருந்து, பின்னர் நெஞ்சை (Chest) தரைக்கு இணையாகக் கொண்டு வருவதுபோல முன்புறம் குனியவேண்டும்.