பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பயிற்சிகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. மாணவ மாணவிகள், செய்முறையில் சிறந்த முயற்சியினை உடற் கல்வி ஆசிரிய ஆசிரியைகள் மூலம் சிறப்புறப் பெற்றுக்கொண்டு வருகின்றார்கள்.

அவர்களுக்கு உறுதுணையாக உதவும் வண்ணம் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது. -

தண்டால் பயிற்சிகள், பஸ்கிப் பயிற்சிகள் பற்றிய விளக்கமும் விவரமும் முற்பகுதியில் தரப்பட்டிருக்கின்றன. அதன்பின், தண்டால் பயிற்சிகள் பற்றிய பெயர் விளக்கமும், செய்முறை விளக்கமும் அடுத்தடுத்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு பயிற்சியையும் உன்னதமாகப் புரிந்துகொள்ளும் வண்ணம், விளக்கத்திற்கு அருகிலேயே படங்களும் தரப்பட்டுள்ளன. தொடர்ந்து பயிற்சி முறையை பொறுப்புடன் செய்திடபடங்கள் உதவி செய்யும்.

அத்துடன், சாகசச் செயல்கள் எனும் தலைப்பில் மாணவ மாணவிகள் பயிற்சி செய்திடும் வண்ணம் ஒரு சில விளையாட்டுக்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. உடற்கல்விப் பாடத் திட்டத்தில் உள்ள அத்தனை விளையாட்டுக்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

- மாணவ மாணவிகள் மட்டுமன்றி, இளைஞர்கள் மற்றும் உடலை எழிலாகவும் வலிமையுடனும் வைத்துக்கொள்ளவிரும்பும் அனைவரும். தாங்களே கற்றுக் கொண்டு தேகப் பயிற்சிகளை செய்திடும் வண்ணம் இந்நூல் செய்முறைகள் விளக்கமாகத் தரப்பட்டிருக்கின்றன.

முதல் முயற்சி என்று முதலிலேயே கூறியிருக்கிறேன். இந்நூல் இன்னும் செழுமை பெறவும், முழுமை பெறவும், இப் பயிற்சி முறையில் அனுபவம் உள்ளவர்கள் எடுத்துக் கூறினால் பெரும் நன்றியுடையவனாக இருப்பேன். வல்லுநர்களிடமிருந்தும் தக்க அறிவுரைகளை எதிர்பார்க்கிறேன். - எனது நூல்களை அன்புடன் ஏற்று ஆதரிக்கும் அன்பாளர்கள், பண்பாளர்கள் அனைவருக்கும் என் நன்றியும் வணக்கமும்.

அன்புடன் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா