60
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
பிறகு, இடது காலைத் தூக்கி முன்புறம் வைத்து, இடது கையை இடது முழங்கால் மீது (இணையாக செல்வது போல நீட்டி) வைத்து, பிறகு வலது காலை பின்புறமாக வைத்து, அதாவது வலது முழங்கால் தரையில் அதே இடத்தில் இருக்க, வலது காலின் கட்டைவிரல் பின்புறமுள்ள தரையில் பதிந்திருக்க அமர்ந்திருக்க வேண்டும்.
இப்பொழுது, இந்நிலையிலிருந்து வலது கையை நெஞ்சுக்கு நேராக மடக்கி வந்து (கட்டை விரல் நெஞ்சுக் கருகில் இருப்பது போல) வைக்கவும்.
இதுதான் ட வடிவுப் பஸ்கியாகும்.
இதே போல், வலது காலை முன்புறமாகக் கொண்டு வந்ததும் இடது காலைப் பின்புறமாகக் கொண்டு சென்றும், வலதுகையை வலது முழங்கால் மீது வைத்தும், இடது கையை நெஞ்சுக்கு முன்னே வைத்தும் பஸ்கியைத் தொடரவும்.
இவ்வாறு கால்மாற்றுவதைத் துள்ளிக் குதித்து செய்யலாம். ஆனால், கைகால்களின் அமைப்பு மேலே விளக்கியிருப்பது போலவே இருக்கவேண்டும். எந்த நேரத்திலும் உடல் நேராக நிமிர்ந்தே இருக்கவேண்டும்.
10. குனிந்து செய்யும் பஸ்கி
(Stooping Baithak)
முதல் வகை: நான்கு கால் முறை (Quadruped Position)
தொடக்க நிலை: முன்புறமாகக் குனிந்து, முழங்கால் களை வளைக்காமல், உள்ளங்கைகள் இரண்டும் முன்பாதங்களுடன் (Toes) ஒட்டியிருப்பது போல வைத்துக்கொண்டு நிற்கவேண்டும்.