உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இளம் வயதில் இதனைச் செய்தால், மேலும் பல பயன்கள் வரும் என்பது சொல்லாமலே விளங்குகிறதன்றோ!

இனி, சாகசச் செயல்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைக் காண்போம்.

1. விநோத நடை (Novelty walk)

இடுப்பின் இருபுறமும் கைகளைப் பதித்து முதலில் நிற்க வேண்டும்.

வலது காலை இடது காலைச் சுற்றிக்கொண்டு வந்து எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் இடதுகாலின் முன்புறத்தில் வைத்து நிற்கவும்.

இப்பொழுது, வலது கால் முன்புறம் இருப்பது போலவே வைத்து, இடதுகாலை நகர்த்தியவாறு நடக்கவேண்டும்.

முன்னோக்கி நடக்கவேண்டும். தோள்கள் எப்பொழுதும் நிமிர்ந்து நேராக இருப்பதுபோல் வைத்துக் கொண்டு நடக்க வேண்டும். பின்னியுள்ள கால்களைப் பிரிக்கவே கூடாது. அதுபோல நகர்த்தியே நடக்க வேண்டும்.

2. சமநிலைக் குந்தல் (Balance Bend)

முதலில் நிமிர்ந்து நிற்கவும்.

பிறகு, இடுப்புக்குப் பின்புறமாக இரு கைகளையும் கொண்டு சென்று, வலது கையால் இடதுகை மணிக்கட்டை (Wrist) இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து, இரு குதிகால்களையும் (Heels) இணையாக இருப்பதுபோல் சேர்த்து வைத்துக்கொண்டு நிற்கவும்.

இப்பொழுது, இணைத்து நிற்கும் கால்களைப் பிரிக்காமல், முழங்கால்களை மடக்கியவண்ணம் அப்படியே