பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

67


தரையில் குந்துவதுபோல் சென்று, கைகளைப் பிரிக்காமல், இடது கையால் தரையினைத் தொட வேண்டும்.

குறிப்பு: கைகளைப் பிரிக்கவோ, கால்களை அகற்றி வைவக்கவோ கூடாது.

3. தலை வைத்து சுற்றல் (Crane Twist)

குறிப்பு: ஒரு சுவரை வைத்தே இந்த செயல் நடந்திட வேண்டும். ஆகவே, கரடுமுரான சுவராக இருக்காமல், வழவழப்புள்ளதாகப் பார்த்து, இந்த சாகசச் செயலை செய்திட அனுமதிக்கவேண்டும்.

மாணவர்களின் உயரத்திற்கேற்ப, நிற்கும் தூரம் மாறுபடும். அந்த தூரத்தை நிர்ணயித்துக் கொள்வது அவரவர் வசதிக்கேற்பவே அமையும் என்பதால், அந்த தூரத்தை செய்பவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

சுவற்றிலிருந்து சுமார் 2 அடி தூரத்தில் நின்று கொள்ள வேண்டும். அந்த தூரத்தில் ஒரு கோடும் போட்டிருக்க வேண்டும்.

அடுத்து, இரண்டு கைகளையும் பின்புறமாகக் கட்டிக் கொள்ள வேண்டும். அழுத்திப் பிடித்துக் கொள்ளா விட்டாலும், பிணைப்பு பிரிந்துவிடக் கூடாது என்பதுதான் முக்கியம்

இப்பொழுது, முன்புறமாக மெதுவாகச் சாய்ந்து சுவரில் மோதிக், கொள்ளாமல், தலையை சுவற்றின்மேல் பொருத்த வேண்டும். அதாவது, முன் நெற்றியை வைத்துக் கொள்ள வேண்டும்.